தங்கம் விலை குறைய காரணம் என்ன? - பங்கு சந்தையில் முதலீடு துவக்கம்

கடந்த சில வாரங்களாக ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, இரண்டு நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்தை

Update: 2020-08-12 14:23 GMT
கடந்த சில வாரங்களாக ஏறுமுகமாக இருந்த தங்கம்  விலை, இரண்டு நாட்களாக  வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக,  ரஷிய அதிபர் புடின் அறிவித்துள்ளதே இந்த விலை இறக்கத்திற்கு காரணம் என்று கருதப்படுகிறது. கொரோனா கட்டுப்படுத்தப்பட்டால், உலக பொருளாதாரம் மீண்டெழும் என்ற நம்பிக்கையால்  தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், தற்போது, மீண்டும் பங்கு சந்தை, டாலர் மற்றும் கடன் பத்திர சந்தைகளுக்கு திரும்பி உள்ளனர். இதனால் தங்கம் விலை மேலும் குறையலாம் என்பது நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்