தமிழகத்தில் தொழில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் - அமெரிக்காவில் துணை முதலமைச்சர் உரை

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அமெரிக்காவில் நடைபெற்ற வட்டமேஜை கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-13 10:34 GMT
அமெரிக்க சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சிகாகோவில் நடைபெற்ற இந்திய - அமெரிக்க தொழில் கூட்டமைப்பின்  சர்வதேச வட்டமேஜை கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய உள்ள வாய்ப்பு குறித்து அவர் உரையாடினார். நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மற்றும் தமிழ்நாடு உறைவிட நிதிக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடு திரட்டுவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. இதில் global strategic alliance நிறுவனத்துடன் அதன் தலைவர் விஜய பிரபாகரன் மற்றும் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்