துணை முதலமைச்சருக்கு அமெரிக்காவில் விருது : "சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது" வழங்கி கவுரவிப்பு

அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு "சர்வதேச வளரும் நட்சத்திரம் - ஆசியா விருது" வழங்கப்பட்டுள்ளது.

Update: 2019-11-11 07:10 GMT
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ''சர்வதேச வளரும் நட்சத்திரம் - ஆசியா விருது'' வழங்கப்பட்டுள்ளது. சிகாகோவில் உள்ள மெடோவ்ஸ் கன்வென்சன் சென்டரில் அமெரிக்க பல இன கூட்டமைப்பு சார்பில் உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், தமிழக நிதித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், இந்திய தூதர அதிகாரிகள், உட்பட பலரும் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்