"உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு" - இலங்கை செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே அறிவிப்பு

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Update: 2019-04-22 14:08 GMT
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 தொட்டுள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது குடும்பத்தினரிடம் அரசு மன்னிப்பு கோரியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சமும், காயமடைந்தவர்களுக்கு காயத்தை பொறுத்து, தலா ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என இலங்கை செய்தி தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத்து அமைப்பிற்கு  
உதவிய சர்வதேச கூட்டாளிகள்  யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்