வைரலான மாணவிகள் பேசிய அதிர்ச்சி வீடியோ - அடுத்தடுத்து பாய்ந்த போக்சோ வழக்கு

Update: 2024-02-01 02:33 GMT

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் அரசு தொடக்கப்பள்ளி

செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த ஒரு வருடமாக

தலைமை ஆசிரியையாக லீலா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கக்கூடிய சிறுமிகள், ஆசியர்கள் உட்பட பலர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக மழலை மொழியில் பேசும் வீடியோ இணையத்தில் பரவியது, பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இதுதொடர்பாக, போலீசார் நடத்திய விசாரணையில், அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் மங்களம் என்பவர், சிறுமிகளை ஆபாச வார்த்தைகளை பேச வைத்து, அதனை வீடியோ எடுத்தது தெரியவந்தது. மேலும், தலைமை ஆசிரியை லீலா மற்றும் ஆசிரியர் மங்களத்திற்கு இடையே சிறு சிறு தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தலைமை ஆசிரியரை பழிவாங்கும் நோக்கில், மங்களம் சிறுமிகளை ஆபாசமாக பேச வைத்தது தெரியவந்ததால், அவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அனுராதா ஆகியோர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் சிறுமிகள் வீடியோ தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்