முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு மனு விசாரணை : "பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் நடைபெறும்" - உச்சநீதிமன்றம் தகவல்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஏற்கனவே தெரிவித்தபடி பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2022-01-25 14:15 GMT
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை  ஏற்கனவே தெரிவித்தபடி பிப்ரவரி 2-ஆவது வாரத்தில் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட கோரிய மனு மற்றும் கேரளா- தமிழகம் இடையிலான முல்லை பெரியாறு அணையின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட கோரிய மனு ஆகியற்றை இணைத்து உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த விசாரணையின் போது முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டிய அம்சங்களை கண்டறிந்து, அவற்றை குறித்து எழுத்துப்பூர்வமாக பிப்ரவரி 4 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழகம், கேரளம், மனுதாரர்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்களுக்கு  உத்தரவிட்டப்பட்டது. மேலும் இந்த மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 2-ஆவது வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிடப்பட்டது. மீண்டும் நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையின் போது, தமிழகம் சார்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி கோரினார். மேலும் பிப்ரவரி இரண்டாவது வாரத்துக்கு முன் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.அப்போது வழக்கு விசாரணை ஏற்கனவே தெரிவித்தபடி பிப்ரவரி 2ஆவது வாரத்தில் நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

Tags:    

மேலும் செய்திகள்