சங்கரன்கோவிலில் ஞாயிறு ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரியும் பொது மக்கள்

முழு ஊரடங்கு நாளான இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Update: 2022-01-09 03:25 GMT
 சங்கரன்கோவிலில் கொரோனா ஊரடங்கு மதிக்காமல் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல் அதிக அளவில் சாலைகளில் சுற்றித் திரிகின்றனர் தற்போது வரை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இல்லை...


தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழநாட்டில் திமுக அரசு பதவியேற்று ஆறு மாதங்களுக்கு மேலான நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு முதன்முதலாக ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும், இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் சாலைகளில் சென்று கொண்டிருக்கிறது...

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு ஆனதே சங்கரன்கோவிலில் கடைப் பிடிக்கவில்லை. மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் எந்த இடத்திலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இன்ப இல்லை என்பது குறிப்பிடத்தக்கது அதனால் பொதுமக்கள் சாதாரண நிலையில் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர்...
Tags:    

மேலும் செய்திகள்