சர்வதேச கபடி போட்டியில் தங்கம் வென்ற மாணவி - மலர் தூவி வரவேற்ற கிராம மக்கள்

சர்வதேச கபடி போட்டியில் தங்கம் வென்று ஊர் திரும்பிய கடலூர் மாவட்டம் கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை ஊர் மக்கள் மலர் தூவி வரவேற்றனர்

Update: 2022-01-06 12:51 GMT
சர்வதேச கபடி போட்டியில் தங்கம் வென்று ஊர் திரும்பிய கடலூர் மாவட்டம் கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியை ஊர் மக்கள் மலர் தூவி வரவேற்றனர். வங்காள தேசத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட 7 பேரில் ஒருவரான மீனாட்சி தனது அணி தங்கப் பதக்கம் வெல்ல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெற்றியுடன் ஊர் திரும்பிய மீனாட்சியை கிராம மக்கள் மலர் தூவி இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தன்னைப் போன்று வெற்றி பெற்று ஊர் திரும்பிய கபடி வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்று மாணவி மீனாட்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்