கலைமகள் சபா மோசடி செய்ததாக எழுந்த புகார்- "புதிய சிறப்பு அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மோசடி புகாரில் சிக்கிய கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க பதிவுத்துறையின் உதவி ஐ.ஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை மூன்று வாரங்களில் நியமிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-11-13 02:34 GMT
இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம், 22 ஆண்டுகள் கடந்தும் முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை வழங்கவில்லை என கூறினார். கலைமகள் சபா நிர்வாகத்தை எடுத்து நடத்த பதிவுத்துறை உதவி ஐ.ஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை சிறப்பு அதிகாரியாக மூன்று வாரங்களில் நியமிக்க தமிழக வணிக வரித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். தற்போது நிர்வாகத்தை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிர்வாகியை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது நிர்வாகத்தை கவனித்து வரும் அதிகாரி ஹரிஹரன், கலைமகள் சபா நிறுவனத்தின் கணக்குகள் வருமான வரி ஆகியவற்றை தணிக்கை செய்து ஆறு வாரங்களில் சிறப்பு அதிகாரியிடம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், சிறப்பு அதிகாரி ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்