"பெண் ஐபிஎஸ் அதிகாரி கணவருடன் ஆஜராக வேண்டும்" - 11ஆம் தேதி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான புகார் தொடர்பான வழக்கில் பெண் ஐபிஎஸ் அதிகாரி தன் கணவருடன் வரும் 11 ஆம் தேதி நேரில் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-11-09 05:33 GMT
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என விழுப்புரம் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் வழக்கு விசாரணை நீதிபதி கோபிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பி. ஆகியோர் ஆஜராகினர். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து புகார் அளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரின் கணவர் வரும் 11ஆம்  தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அன்றைய தினம் சாட்சிகள் விசாரணை நடக்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்