செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் ஒன்றரை மணிக்கு நீர் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2021-11-07 04:38 GMT
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, கனமழை எதிரொலியால் வேகமாக நிரம்பி வருகிறது.

 25.51 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள செம்பரம்பாக்கம் ஏரி, மொத்த கொள்ளளவான 24 அடி உயரத்தில், நீர் இருப்பு 21 புள்ளி 30 அடியாக உள்ளது. 

காலை 6 மணி நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 600 கனஅடி இருந்த நிலையில், முழுக் கொள்ளளவான மூவாயிரத்து 645 மில்லியன் கனஅடியில், இரண்டாயிரத்து 934 மில்லியன் கனஅடி நிரம்பியுள்ளது.

ஏரி வேகமாக நிரம்பி வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி பிற்பகல் ஒன்றரை மணிக்கு உபரியாக 500கனஅடி திறக்கப்படும் என தெரிவித்துள்ள பொதுப்பணித்துறை, நீர்திறப்பு உயர்த்தப்படும் என கூறியுள்ளது.

ஏரி திறப்பதால், சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை, அடையாறு ஆகிய பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கையும், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை உடனடியாக வெளியேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்