"இன்ப துன்பங்களை மறந்து காவல் பணி" - காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
காவலர் வீர வணக்க நாளையொட்டி, தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
காவலர் வீர வணக்க நாளையொட்டி, தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு - உறக்கம் - இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அனைத்து காவலர்களுக்கு அவர் வீரவணக்கம் தெரிவித்துள்ளார்.