பூ வியாபாரி தற்கொலை சம்பவம் எதிரொலி- வி.ஏ.ஓ. சீனிவாசன் தற்காலிக பணியிடை நீக்கம்

பேஸ்புக்கில் லைவ் செய்து விட்டு பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் எதிரொலியாக வி.ஏ.ஓ தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-10-21 03:02 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வி.ஏ.ஓ நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பூ வியாபாரி பிரபுவுக்கு சரண்யா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.  இவர் தன் பூர்வீக சொத்தை சகோதர‌ர்களுடன் பிரித்து வாங்குவதற்காக நடுக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனை நாடியுள்ளார். இதற்காக ஒருமாதகாலமாக வி.ஏ.ஓ அலுவலகத்துக்கு பிரபு அலைந்து வந்த நிலையில், சீனிவாசன்  10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த பூ வியாபாரி நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் ஆலயம் அருகே உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அவர் பேஸ்புக் லைவில் வி.ஏ.ஓ சீனிவாசன் லஞ்சம் கேட்டது, அலைக்கழித்த‌து என அனைத்தையும் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆரணி வருவாய் துறையினர் வி.ஏ.ஓ சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், சீனிவாசனை ஆரணி கோட்டாட்சியர் கவிதா தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.   

Tags:    

மேலும் செய்திகள்