5-வது நாளாக பதுங்கி இருக்கும் ஆட்கொல்லி புலி - புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் 5-வது நாளாக ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-09-29 11:14 GMT
கூடலூர் பகுதியில் மூன்று மனிதர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாடுகளை ஆட்கொல்லி புலி வேட்டையாடியுள்ளது. இந்த புலியை பிடிக்கும் பணியில் கேரளாவில் இருந்து சிறப்பு பயிற்சி பெற்ற 15 வனத்துறையினர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மயக்க மருந்து நிரப்பபட்ட  துப்பாக்கியுடன் 3 குழுக்களாகப் பிரிந்து வனத்துறையினர் புலியை தேடி வருகின்றனர். நேற்று மேப்பில்ட் பகுதியில் புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்திருந்தனர். ஆனால் புலியை பிடிப்பதற்குள், வனத்துறையினரை புலி ஏமாற்றி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த நிலையில் ஐந்தாவது நாளாக இன்று வனத்துறையினர் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கடந்த 6 நாட்களாக இந்த புலி நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் வீட்டில் முடங்கி இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்