புதிய துணைவேந்தர்கள் நியமனம் - குடியரசு தலைவர் உத்தரவு

12 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்துள்ளார்.

Update: 2021-07-23 14:08 GMT
12 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக மத்தியகல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் முத்து கலிங்கன் கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,.

இமாச்சலப் பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சத் பிரகாஷ் பன்சாலும், 

ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சஞ்சீவ் ஜெயினும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பூசன் தாஸும், 

கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சத்தியநாராயணாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹரியானா மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக  பேராசிரியர் டங்கேஷ்வர் குமாரும், 

card 6 ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பசுத்கர் ஜே ராவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் காமேஷ்வர் நாத் சிங்கும்,  

வட கிழக்கு மலை பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் பிரபா சங்கர் சுக்லாவும் நியமனம் செய்யப்பட்டுள்னர்,.

குரு காஷிதாஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அலோக் குமார் சக்ரவாலும் 

மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சையத் ஐனுல் ஹசனும் 

மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக என்.லோகேந்திர சிங்கும்
நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்