5 நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் - அனுமதி உத்தரவை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் ஐந்து நிறுவனங்களுக்கு முதலீட்டு மானிய அனுமதி உத்தரவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2021-07-20 12:02 GMT
தமிழகத்தில் ஐந்து நிறுவனங்களுக்கு முதலீட்டு மானிய அனுமதி உத்தரவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'முதலீட்டாளரின் முதல் முகவரி தமிழ்நாடு' விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஐந்து நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியத்திற்கான அனுமதி உத்தரவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் முதலீடு செய்து செயல்படும் ஆரம்ப நிலை புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஐந்து கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோர் ஸ்டாக் நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய், 
அட்சயா டெக்னாலஜிக்கு 60 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், ஸ்வையர் பே நிறுவனத்திற்கு 41 லட்சத்து, 7 ஆயிரம் ரூபாய், பசிஃபயர் நிறுவனத்திற்கு 44 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் உள்பட ஐந்து நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்