முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை - மேலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்க வாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Update: 2021-07-15 14:47 GMT
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகள் மேலும் தளர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூடப்பட்டுள்ள திரையரங்குகள், நட்சத்திர விடுதியில் இயங்கும் மதுக்கூடங்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி, பள்ளிக்கூடங்கள் திறக்கும் சூழல் உள்ளதா உள்ளிட்டவை  குறித்து அரசு உயர்அதிகாரிகளோடு முதலமைச்சர் நாளை ஆலோசனை விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்