கீழடியில் 7ம் கட்ட அகழாய்வுப் பணி - 2600 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு

கீழடியில், 7ம் கட்ட அகழாய்வுப் பணியில், 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மண்பானை மூடி மற்றும் கருப்பு நிறத்தாலான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-22 08:39 GMT
கீழடியில், 7ம் கட்ட அகழாய்வுப் பணியில், 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மண்பானை மூடி மற்றும் கருப்பு நிறத்தாலான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம், கீழடியில், பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட  7ம் கட்ட அகழாய்வுப்பணி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் கீழடியிலும், தொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளிலும், அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு முதல் குழி தோண்டப்பட்டபோது, பானை ஓடுகள் கிடைத்தன. இரண்டாவது குழி தோண்டப்பட்ட போது சுமார் 9 அடி ஆழத்தில், 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான மண்பானையின் மூடி, மற்றும் கருப்பு நிறத்தாலான கற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை தோண்டப்பட்டதில், 238 கிராம் எடை உள்ள உழவிற்குப் பயன்படுத்தப்படும் கற்களால் ஆன மண்வெட்டும் கருவி, பொழுதுபோக்கிற்கு பயன்படுத்திய கல்லால் ஆன 2 செ.மீ நீளமுள்ள பகடை, பாசிகள், மற்றும் ஓடுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. மேலும் அகழாய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
Tags:    

மேலும் செய்திகள்