கிரிஜா வைத்தியநாதன் தகுதி குறித்து அதிருப்தி - நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவு

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Update: 2021-04-09 13:45 GMT
கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை கோரி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டப்படி, நிபுணத்துவ உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்கள் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், ஆனால் கிரிஜா வைத்தியநாதன் 3 ஆண்டுகள் ஆறு மாதங்கள் மட்டுமே சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் அனுபவம் பெற்றிருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 19 ஆம் தேதி கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. கிரிஜா வைத்தியநாதன் தகுதி குறித்து அதிருப்தி தெரிவித்த  தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் தீர்வு காணும் வரை, அவரது நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் விசாரணை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்