யானைகளை பராமரிக்க புதிய கொள்கைகள் - உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் தனியார் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளை பராமரிக்க, புதிய கொள்கைகளை வகுக்குமாறு, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-02-23 11:14 GMT
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் யானைகளை பராமரித்த பாகன்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, முறையான காரணங்கள் இல்லாமல், பாகன்களை மாற்றியதால் யானைகளின் உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும், யானைகளுக்கு உரிய சிகிச்சை கோரியும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனை கேட்ட தலைமை நீதிபதி, யானைகள் சித்திரவதை செய்யப்படுவது அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்தார். 
மேட்டுப்பாளையம் முகாமில் கோவில், யானைகள் சித்திரவதை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், தமிழகத்தில் தனியார் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளை பராமரிக்க, புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுத்து, 8 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய  அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்