பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கு அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள பேரறிவாளனை சந்திக்க அவரது தாய் அற்புதம்மாளுக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-12-23 10:32 GMT
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பேரறிவாளன், உடல் நலம் சரியில்லாமல் பரோலில் வெளியில் வந்த நிலையி​ல், கடந்த 7 ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பிச்  சென்றார். இந்த நிலையில் பேரறிவாளனை சந்திக்க அவரது தாய் அற்புதம்மாள் மற்றம் உறவினர்களுக்கு அனுமதி வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வு, ஜனவரி 19 வரை, வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அற்புதம்மாள், தனக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை பரிசோதித்து மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பொறுத்தவரை காணொலி காட்சி மூலம் சந்திக்கலாம் எனவும், யாரை அனுமதிப்பது என்பது குறித்து  சிறை கண்காணிப்பாளர் முடிவு செய்யலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்