வரி ஏய்ப்பு புகார் - தொழிலதிபர் கைது

மதுரை அழகப்பா நகர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை கனக ரத்தினம் என்பவர் நடத்தி வந்துள்ளார்.

Update: 2020-12-23 08:10 GMT
மதுரை அழகப்பா நகர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை கனக ரத்தினம் என்பவர் நடத்தி வந்துள்ளார். 
இந்த நிறுவனத்தில் போலி ரசீதுகளை சமர்ப்பித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 

அதன்படி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த போது போலியான ரசீதுகளை சமர்ப்பித்து ஜிஎஸ்டி கட்டாமல் 21 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரையில் உள்ள மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் விசாரணை நடத்தியதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நிறுவனத்தின் உரிமையாளர் கனகரத்தினம் கைது செய்யப்பட்டார். 

நள்ளிரவு மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கனக ரத்தினம் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். மோசடி புகாரில் 1 கோடியே 77 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி செலுத்திய நிலையில் மீதமுள்ள பணத்தை திருப்பி செலுத்தினால் ஜாமீனில் விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்