"புவி வெப்பமயமாதல் அதிகரிப்பு எதிரொலி" - "அடிக்கடி புயல்கள் உருவாவது ஆபத்து"

புயல் எண்ணிக்கை அதிகமானால், கடல் நீர் மட்டம் அதிகரிப்பதோடு, நிலத்திற்குள் கடல் நீர் வரும் அபாயம் ஏற்படும் என ஐஐடி பேராசிரியர் கூறியுள்ளார்.

Update: 2020-11-27 12:33 GMT
அடிக்கடி புயல் உருவாவதற்கு புவி வெப்பமயமாதல் முக்கிய காரணம் என ஐஐடி ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கடல்சார் பொறியியல் தொழில்நுட்பத் துறை தலைவர் சன்னாசிராஜ், 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ள மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறை உத்தரவின் பேரில் 3ஆம் ஆண்டாக ஆய்வு  நடப்பதாக  கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் அதிகரிப்பால், கடல் மட்டம் உயரும் என்றார். கடல்நீர் நிலப்பகுதியில் ஊடுருவும் அபாயம் இருப்பதாக சுட்டிக் காட்டிய அவர், 13 பேராசிரியர்கள், அவர்களுக்கு கீழ் 25 பேர் அடங்கிய குழு நாகப்பட்டினம், கடலூர், மாமல்லபுரம் , எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் புயலுக்கு முன்பின் உள்ள மாற்றங்களை ஆய்வு செய்து வருகிறது என்றார். இன்னும் ஒருமாதத்தில் முடிவு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்