மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் - அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை வெளியிடுகிறார்

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை வெளியிடுகிறார்.

Update: 2020-11-15 06:57 GMT
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேர 38 ஆயிரம் மாணவர்கள், இந்த ஆண்டு விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், தரவரிசைப் பட்டியலை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை வெளியிட உள்ளார். மேலும் கலந்தாய்வுக்கான அட்டவணையையும் அவர் வெளியிடுகிறார். இதனிடையே, 17-ஆம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், 18 ஆம் தேதி அரசு பள்ளி தனி இட ஒதுக்கீடு மாணவர்களுக்கும், 19-ஆம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்றும், ஒரு நாளைக்கு 500 பேர் அழைக்கப்படுவார்கள் என்றும் மருத்துவக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்