காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி - சென்னை மாநகரில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.

Update: 2020-11-07 11:08 GMT
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி , சேப்பாக்கம் , பிராட்வே உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது இளம் வெயிலுடன் சாரல் மழை பொழிந்தது. இதனால் சென்னையில் குளிர்ந்த காற்றுடன் இதமான சீதோஷணநிலை நிலவுகிறது. 

குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் - மழைநீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் 

சென்னை திருவொற்றியூரில் குடியிருப்புகளுக்குள் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழைநீர் வடியாமல் இருந்ததால், மக்கள் அவதியுற்றனர். அவர்கள் நலன் கருதி, ராட்சத மோட்டார்கள் மூலம் மூன்று பம்புகள் வைத்து மழைநீரை உறிஞ்சி எடுக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதனால் பொது மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்

விட்டு விட்டு பெய்த மிதமான மழை - நிலத்தடி நீர்மட்டம் உயர்வு 

பொன்னேரி சுற்றுவட்டாரங்களில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் வெயிலுடன் கூடிய லேசான மழை பொழிந்தது. பருவமழை காரணமாக, பொன்னேரி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு, நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதாக அப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்