"கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களை கைது செய்தால் என்ன?" - உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேறு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-08 02:31 GMT
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்களுக்கு அதிக அளவில் அபதாரம் விதிக்க வேண்டும் எனவும், ஊரடங்கு  உத்தரவை முழுமையாக கடை பிடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்,.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுவது கிடையாது என்றும்
 Vogfx card 4
 வார விடுமுறை நாட்களில் அசைவ பிரியர்கள் அதிக அளவில் கூட்டம் கூடுவதை ஊடகங்களில் காணமுடிகிறது என்றும் தெரிவித்திருந்தனர்,.

பல இடங்களில் தொடர்ந்து அபராதங்கள் விதிக்கப்பட்டாலும் பலர் முக கவசம்  அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள் 

அபராத தொகையை 2 ஆயிரமாக உயர்த்தினால் என்னஎன கேள்வி எழுப்பினர்,.

மேலும் நடவடிக்கைகளை கடுமையாக்கி முக கவசம் மற்றும்  சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் கைது நடவடிக்கை மேற் கொண்டால் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்..

மேலும் கொரோனா  நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேறு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள்  நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Tags:    

மேலும் செய்திகள்