சட்டவிரோத தண்ணீர் நிறுவனங்கள் - நீதிமன்றம் அதிரடி

தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-07 11:05 GMT
தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை வெறும் 143 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தியதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி 15% தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்காத ஆலைகளை மூட உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 19 க்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினர். மேலும், ஆலைகளில் Flow meter கருவிகள் பொருத்த கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக கொள்கை முடுவு எடுக்கவும் வலியுறுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்