கிசான் முறைகேடு : "தகவல் வழங்கினால் வெகுமதி வழங்கப்படும்" - சிபிசிஐடி தகவல்

பிரதமர் கிசான் திட்டத்தில் மோசடியாக பணம் பெற்ற போலி விவசாயிகள் யார் யாரென வேளாண்துறை, சிபிசிஐடி-யிடம் பட்டியல் வழங்கியுள்ளது.

Update: 2020-09-25 05:01 GMT
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மூன்று ஹெக்டர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு  விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமர் கிசான் நிதி உதவி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் வங்கி கணக்கில் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கி வந்தது. இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பலரை போலியாக இணைத்துள்ளதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் போலி விவசாயிகள் சேர்க்கப்பட்டு, 110 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரியவந்த‌து. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், இதுவரை 60 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே போல, இந்த மோசடி தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் சிபிசிஐடி-யிடம் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், கடந்த 6 நாட்களில் மட்டும் 300 தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்