100% கட்டணம் கேட்டதாக 97 தனியார் பள்ளிகள் மீது புகார் - விசாரணையை தீவிரப்படுத்திய முதன்மை கல்வி அலுவலர்கள்

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி 97 தனியார் பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை வசூலித்ததாக கல்வித்துறைக்கு புகார் வந்துள்ளது. இந்த பள்ளிகள் மீது தற்போது முதன்மை கல்வி அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-09-16 12:09 GMT
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணங்களை மூன்று தவணைகளாக வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதற்கு மாறாக 100 சதவீத கட்டணத்தையும் ஒரே தவணையில், பல்வேறு தனியார் பள்ளிகள் பெற்றன என புகார்கள் வந்தன. இது தொடர்பான புகார்களை மாநில பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் மின்னஞ்சல் முகவரியில் பெற்றோர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,  இதுவரை 97 புகார்கள் வந்து இருப்பதாகவும், அந்த பள்ளிகளிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்