மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50% இடமளிக்க கோரிக்கை : மனுக்களை விசாரிக்க உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க. தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களை உடனடியாக விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-07-13 11:51 GMT
மருத்துவ படிப்பில்  தமிழகத்தால் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில்  50% இடங்களை தமிழகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை உடனடியாக விசாரணைக்கு எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  

இதே போல் மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  நீட் பட்டியல் அடிப்படையில் மருத்துவ மேற்படிப்புக்கான  மாணவர் சேர்க்கை நடத்த இடைக்கால தடை விதிக்கக் கோரி மருத்துவர் டி.ஜி.பாபு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனுக்கள் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இடஒதுக்கீடு கோரி நிலுவையில் உள்ள சலோனி குமாரி வழக்கிற்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களும் தொடர்பில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் அந்த மனுக்களை விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


Tags:    

மேலும் செய்திகள்