அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி சாத்தியமாகுமா?

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நடைமுறையில் சாத்தியமாகுமா? என விளக்குகிறது இந்த தொகுப்பு....

Update: 2020-07-09 06:08 GMT
* தனியார் கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் வழி கல்வித்திட்டங்களை வழங்கி வரும் நிலையில், அரசு பள்ளிகளிலும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

* இந்த நிலையில், அரசுப்பள்ளிகளில் ஆன்லைன் கல்வி திட்டத்தை வரும் 13 ஆம் தேதி முதல்  அமல்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

* இதன் காரணமாக குழப்பமடைந்த அதிகாரிகள், அமைச்சரிடம் கேட்டபோது,  ஆன்லைன் வழி கல்வி என கூறவில்லை என்றும், தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்கப்படும் என  கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

* இதனால் ஆன்லைன் கல்வி திட்டமா அல்லது தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது . 

* ஆன்லைன் வழி கல்வித் திட்டத்தை அமல்படுத்த முயற்சித்தால் அந்த திட்டம்  தோல்வியில்தான் முடியும் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்