தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் - ஊமைக்காயம் என முதல் தகவல் அறிக்கை

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழக்க காரணமான வழக்கில், கீழே விழுந்து உருண்டதால் உமைக்காயம் ஏற்பட்டது என முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது.

Update: 2020-06-24 08:26 GMT
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழக்க காரணமான வழக்கில், கீழே விழுந்து உருண்டதால் உமைக்காயம் ஏற்பட்டது என முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து முதல் அறிக்கையில் கூறப்பட்ட தகவல்களை தற்போது பார்க்கலாம்...

கடந்த 19ஆம் தேதி இரவு 9.15 மணி அளவில் சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே கொரனா நோய் தொற்றை தடுக்கும் வகையில், சாத்தான் குளம் காவல் நிலைய தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்துராஜ் என்பவரும் ரோந்து சென்றபோது, 

அங்கு செல்போன் கடை கடை வைத்திருந்த பென்னீக்ஸ் தனது கடையை திறந்து வைத்து, அவரது தந்தை மற்றும் சிலருடன் கூட்டமாக நின்றதாகவும், 

அப்போது காவலர்கள் அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி கடை திறந்திருப்பதை நிறுத்தி உடனடியாக கடையை மூட வேண்டும் என சொல்லியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

கடை உரிமையாளரான பென்னீக்ஸ் மற்றும் அவரது தந்தை செல்வராஜ் அகியோர் காவலர்களை தகாத வார்த்தை சொல்லி திட்டியதோடு தரையில் அமர்ந்து புரண்டதால் ஊமைகாயம் ஏற்பட்டுள்ளதாகவும்,

காவலர்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர் எனவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்