மதுரையில் நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

மதுரையில் நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

Update: 2020-06-24 01:41 GMT
மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 988ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மதுரையில் நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் 2 மணி வரை திறந்து இருக்கும். ஊரடங்கு கடைபிடிக்கப்படும் பகுதிகளில் அரசு மற்றும்  தனியார் பேருந்துகள் நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன. டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்ட எல்லைகளை கண்காணிக்க 14 சோதனை சாவடிகள் அமைத்து போலீஸார், வருவாய் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்