உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளுக்கு தற்காலிக அனுமதி - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கொரோனா பாதிப்பு காரணமாக, உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக ஜூலை 31-ம் தேதி வரை இயக்க அனுமதி அளிக்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-03-23 13:55 GMT
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி,  சுரேஷ்குமார் அமர்வில்  மீணடும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உரிமம் கோரி விண்ணப்பித்த 690 குடிநீர் ஆலைகளில் 121 ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உரிமம் கோரி விண்ணப்பித்த தகுதியுடைய  குடிநீர் ஆலைகளை, தற்காலிகமாக ஜூலை 31ம் தேதி வரை இயங்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் இதுதொடர்பாக ஓரிரு நாளில் அரசாணை பிறப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இந்த ஆலைகள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதம் தண்ணீரை  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து குடிநீர் ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் என அரசுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்