ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமாருக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து - சென்னை உயர்​ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கையை பாராட்டி ஐ.பி.எஸ். அதிகாரியான விஜயகுமாருக்கு அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழக அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டது.

Update: 2020-02-27 21:35 GMT
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு எதிரான நடவடிக்கையை பாராட்டி ஐ.பி.எஸ். அதிகாரியான விஜயகுமாருக்கு அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழக அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டது. இதை 2009 ம் ஆண்டு ஒரு கோடியே 99 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்த தொகைக்கு  வரி செலுத்தும்படி, விஜயகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து  விஜயகுமார் தாக்கல் செய்த வழக்கில், பொது நலனுக்கு சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்களுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த நீதிபதி, வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்