"இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்" - எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
மாணவர்கள் மீது குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் புகார் அளித்தனர்.;
மாணவர்கள் மீது குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாநகர காவல்துறை ஆணையாளரிடம் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் புகார் அளித்தனர். அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 20ஆம் தேதி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் எச். ராஜா பேசியதாக குற்றம்சாட்டினர். இருசாரர் இடையே கலவரத்தை தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசிய எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.