Yeman Conflict ஏமன் பகுதிகளை கைப்பற்றி வெற்றிக் கொண்டாட்டம் -``மீண்டும் போர் தீவிரமடையும் வாய்ப்பு’’
ஏமனில் முன்னேறும் கிளர்ச்சிப் படை - ஆதரவாளர்கள் பேரணி
ஏமன் நாட்டின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக, ஏடன் நகரில் கிளர்ச்சிப் படை ஆதரவாளர்கள் பிரம்மாண்ட பேரணி சென்றனர். கிழக்கு மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக எஸ்.டி.சி, கிளர்ச்சிப் படை அறிவித்ததை தொடர்ந்து இந்த பேரணி நடைபெற்றது. இதனால் 10 ஆண்டுகால உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.