Bangladesh | சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்று கூறுவதா? - நிராகரித்த வங்கதேசம்
டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தை நியாயப்படுத்த முடியாத சம்பவம் என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கதேசத்தைச் சேர்ந்த குடிமகன் ஒருவர் மீது நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலை அவர் இந்து என்பதற்காக, சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என இந்தியா அதிகாரிகள் சித்தரிப்பதை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து நாடுகளுக்கும் தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்கும் கடமை இருப்பதை வங்கதேசம் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.