``இது இந்தியா அல்ல, நியூசிலாந்து'' - வெளிநாட்டு மண்ணில் அதிர்ச்சி செயல்
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடந்த சீக்கிய அணிவகுப்பிற்கு நடுவே நியூசிலாந்து தேசபக்தர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் திடீரென ஹக்கா நடனமாடி இடையூறு ஏற்படுத்தினர்... நியூசிலாந்தின் பழங்குடி மக்களான மாவோரி இனத்தவரின் பாரம்பரிய சடங்கு நடனம் ஹக்கா... இந்நிலையில், சீக்கியர்களின் பேரணியை நிறுத்திய நியூசிலாந்து தேசபக்தர்கள் குழுவினர் 'இது இந்தியா அல்ல, நியூசிலாந்து' என்றும், கிறிஸ்துவ மதத்திற்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பி ஹக்கா நடனமாடினர். இருப்பினும் சீக்கிய பேரணி அமைதியான முறையில் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.