24 மணி நேரத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 10 பேர் கொலை

Update: 2025-12-20 16:05 GMT

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தெற்கு மற்றும் வடக்கு காசாவில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காசாவில் கான் யூனிஸுக்கு கிழக்கே உள்ள பானி சுஹைலா நகரத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை மீண்டும் மீண்டும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு பெண் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துஃபா பகுதியில் இடம்பெயர்ந்த பொதுமக்களுக்கு அடைக்கலம் கொடுத்த பயிற்சி மையத்தை இஸ்ரேலிய படைகள் குறிவைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்