USA Crime History | பாலியல் குற்றவாளியுடன் அமெரிக்க முன்னாள் அதிபர், மைக்கேல் ஜாக்சன்
அமெரிக்காவில் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் ஒரு பகுதியை அந்நாட்டு நீதித்துறை வெளியிட்டுள்ளது. எப்ஸ்டீனுடன் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் பல பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, கடந்த 2019ம் ஆண்டு சிறையில் இருந்தபோதே மரணமடைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 3 லட்சம் பக்கங்களுக்கும் மேற்பட்ட தரவுகள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், எப்ஸ்டீனின் கூட்டாளியான கிஸ்லைன் மேக்ஸ்வெல் Ghislaine Maxwell, புகழ்பெற்ற பாடகர் மிக் ஜாகர் Mick jagger, மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.