Space | Blue Origin | ஜீரோ கிராவிட்டியில் உலகின் முதல் மாற்றுத்திறனாளி பெண்

Update: 2025-12-21 04:18 GMT

ஜீரோ கிராவிட்டியில் உலகின் முதல் மாற்றுத்திறனாளி பெண், விண்வெளிக்கு சென்று வந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் என்ற பெருமையை ஜெர்மனியை சேர்ந்த மைக்கேலா பென்தாஸ் என்பவர் பெற்றுள்ளார்.

அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸ், புளூ ஆரிஜின் என்ற நிறுவனம் மூலம் விண்வெளி சுற்றுலா சேவையையும் வழங்கி வருகிறார். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் விண்வெளியில் சிறிது நேரம் ஜீரோ கிராவிட்டியை உணர்வார்கள். இந்த பயணத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் விண்வெளி பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த பெண்ணான மைக்கேலா பென்தாஸ், ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்ஸியில் பொறியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்