10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள்... விவரம் அளிக்காத பள்ளிகளின் பட்டியல் வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் விவரங்களை தராத 250 பள்ளிகளின் பட்டியலை பொது தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

Update: 2020-01-04 22:57 GMT
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளன. இதனைத் தொடர்ந்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக் கூடிய மாணவர்களின் முழுமையான விவரங்களை டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் தேர்வுத் துறைக்கு அளிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. நேற்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் 250 பள்ளிகள் மாணவர்களின் தகவல்களை,  தேர்வுத் துறைக்கு அனுப்பவில்லை என தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் விவரங்களை அளிக்காத 122 பள்ளிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார் . மாணவர் நலன் கருதி உடனடியாக அனைத்து மாணவர்களின் விவரங்களை தேர்வுத் துறைக்கு அனுப்ப  வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்