ஊரக உள்ளாட்சி தேர்தல் அரசாணை வெளியீடு : இரண்டு கட்ட தேர்தல் தேதி அறிவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2019-12-09 07:54 GMT
முதல்கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம வார்டு உறுப்பினர்களுக்கும் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக  30 ஆம் தேதி, 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்