இந்திய அளவிலான சிறந்த 10 காவல் நிலையங்கள் - தேனி மகளிர் காவல்நிலையத்திற்கு 4வது இடம்

இந்திய அளவிலான சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் தேனி மகளிர் காவல்நிலையத்திற்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

Update: 2019-12-07 04:29 GMT
2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் 4வது இடம் பிடித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் மரங்களுடன் கூடிய இயற்கைச் சூழல் ஆவண பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேனி காவல் நிலையத்திற்கு 4வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்