17 பேர் பலியான இடத்தில் முதலமைச்சர் ஆய்வு

கோவை மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2019-12-03 15:26 GMT
கோவை மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் எஸ்பி வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் நடூர் சென்றனர். அங்கு சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி, பலியானோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்