மருத்துவர்கள் போராட்டம் : நோயாளிகள் பாதிப்பு

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2019-10-29 12:21 GMT
தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு அரசு மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால்  போராட்டம் தீவிரமடையும்  என தெரிவித்துள்ளனர்.

சேலம் 

சேலத்தில் 5வது நாளாக அரசு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 

நெல்லை

நெல்லையில் அரசு மருத்துவர்கள் இன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் மருத்துவர்கள் அமைத்திருந்த பந்தல் உள்ளிட்டவற்றை மருத்துவ கல்லூரி நிர்வாகம் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி

ஆரணியில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விபத்தில் சிக்கிய இளைஞருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வராததால், அவர் உயிரிழந்தார். இதனால் உறவினர்கள், மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் கலைந்து சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்