4,000 மருத்துவ மாணவர்களின் கை ரேகை பதிவை விரைவில் தேசிய தேர்வு முகமை கை ரேகைகளுடன் ஒப்பீடு - மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்

தமிழகம் முழுவதும் இருந்து மருத்துவ மாணவர்களின் கைரேகைகள் பெறப்பட்டு உள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை அளிக்கும் கை ரேகைகளுடன் ஒப்பீடு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-24 11:48 GMT
நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படித்து வரும் மாணவர்களில் பலர் முறைகேடாக ஆள்மாறாட்டம் செய்தும்,  வேறு வகைகளிலும் கல்லூரிகளில் சேர்ந்த விவகாரம் ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்துள்ளன . இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் முறைகேடு செய்துள்ளனரா என்பதை  100 சதவீதம் அளவு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நான்காயிரம் மாணவர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, சீலிடப்பட்ட உறையில் மருத்துவ கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . இந்த கைரேகைகளை, நீட் தேர்வின் போது மாணவர்கள் அளித்து, தேசிய தேர்வு முகமையிடம் இருக்கக்கூடிய கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.தேசிய தேர்வு முகமையில்  இருந்து ஒரு சில  நாட்களில் தமிழக மாணவர்களின் கைரேகைகள் குறித்த ஆவணங்கள் கிடைக்கும் என்றும், அதன்பிறகு ஒப்பீடு செய்யும் பணி தொடங்கும் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர் ஒருவர் முறைகேடான வகையில் கடந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து இருப்பதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக அந்த மாணவரின் புகைப்படத்தில் வித்தியாசம் இருப்பதால் அது குறித்து விசாரணை நடத்தி இருக்கிறோம் என்றும், போலீசில் இதுதொடர்பாக புகார் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்