திருச்சி நகைக்கடை கொள்ளை - அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி தகவல்கள்

திருச்சி நகைக்கடை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான முருகன் மீது பெங்களூருவில் மட்டும் 119 கொள்ளை வழக்குகள் இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.;

Update: 2019-10-19 08:14 GMT
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன், கடந்த 11ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனிடையே அவர் பெங்களூருவில் நடந்த பல்வேறு கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி பெங்களூருவில் மட்டும் 119 வழக்குகள் முருகன் மீது உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளையடிக்கும் நகைகளை எல்லாம் மதுரையில் உள்ள ஒரு குழுவிடம் கொடுத்து விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் மதுரையை சேர்ந்த கணேசன் மற்றும் கோபால் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகன் அளிக்கும் தகவலின் பேரில் மேலும் பலர் சிக்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்