Puducherry Politics | மாஸ் காட்டும் ஜோஸ் சார்லஸ் - தவெக உட்பட பல கட்சி நிர்வாகிகள் LJKல் இணைப்பு
புதுச்சேரியில், என்.ஆர் காங்கிரஸ், பாஜக, தவெக உட்பட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்.
லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை, இந்திரா நகர் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் முன்னாள் மத்திய மாவட்ட தலைவர் மணிகண்டன், மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி பிரேம் குமார் ஆகியோர் நேரில் சந்தித்து லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர். இதேபோல், நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி பாலாஜி, புதுச்சேரி பாஜக முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு காரைக்கால் மாவட்ட தலைவர் A.R.சந்திரமௌலிஷ்வரர், முத்தியால்பேட்டை தொகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், முத்து கோல்ட் ஹவுஸ் மற்றும் முத்து சில்க் பிளாசாவின் உரிமையாளருமான குமரன், உழவர்கரை தொகுதியை சேர்ந்தவரும், சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரனின் மருமகனுமான தொழிலதிபர் சாய்பவன், மங்களம் தொகுதியைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி விக்கி ஆகியோரும், லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை சந்தித்து, கட்சியில் இணைந்தனர். இச்சந்திப்பின்போது, புதுச்சேரி அரசுத் துறைகளில் குரூப் சி பணியிடங்களுக்கு வயது தளர்வு 5 ஆண்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோஸ் சார்லஸ் மார்டினிடம், பட்டதாரி இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.